வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் பிருத்விராஜ்...மனைவியின் சந்தேகத்திற்கு, அங்கிருந்தே பதில்...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இப்பிழையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே மாதம் இறுதி வரைக்கும் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்திவி ராஜ். இவர் தனது அடுத்த படமான 'ஆடுஜீவிதம்' படப்பிடிப்பில் இருந்தார். இந்த ஷூட்டிங் ஜோர்டான் நாட்டின் பாலைவனத்தில் நடைபெற்று வந்தது. கொரோனா காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், 58 பேர் கொண்ட படக்குழு தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. இது பற்றி நடிகர் பிருத்திவி ராஜ் சமீபத்தில் ஒரு நீண்ட பதிவு இட்டிருந்தார். மேலும் உணவுக்கும் பஞ்சமாக இருப்பதாகவும் கவலை தெரிவித்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களை உலுக்கியது.
இந்நிலையில் அவரது மனைவி சுப்ரியா மேனன் தற்போது ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் ரசிகர் ஒருவர் வரைந்த ஓவியத்தை காட்டி "இது மிகவும் அழகாக இருக்கிறது இந்த புகைப்படத்தை வரைந்தவர் தன்னை யாரென்று வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும். இந்த அழகான ஓவியத்திற்கு நன்றி. இவரது பெயர் பிஜு என்று கண்டறியப்பட்டுள்ளது. என்று கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த நடிகர் பிருத்விராஜ் "அன்புள்ள மனைவி இது எனக்கு பிஜு என்பவர் பரிசளித்தது. நமது உறவினர் ஒருவர் ஜோர்டானில் வைத்திருக்கும் கலை கூடத்தில் இவர் பணிபுரிகிறார்" என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.