''கொரோனாவிடமிருந்து தப்பி இந்த பிரச்சனையில் சிக்கும் குழந்தைகள்...'' - பிரபல இயக்குநர் கண்டனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேரச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

Popular director issues statement against Online Classes during Coronavirus lockdown | ஆன்லைன் கற்றல் முறைக்கு எதிராக பிரபல இயக்குநர் கண்டனம்

வழக்கமாக கோடை விடுமுறை முடிந்ததும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க சில பள்ளிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக 'குற்றம் கடிதல்', 'மகளிர் மட்டும்' படங்களின் இயக்குநர் பிரம்மா ஆன்லைன் மூலம் கற்பித்தல் முறை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் கல்வி நிறுவனம் (NIMHANS) குழந்தைகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்னணு காணொளிகளைப் பார்க்கக் கூடாதென்கிறது.

போன் - லாப்டாப்களினால் கிட்டப்பார்வை கோளாறுகள் உருவாகும் என்று கண் சிகிச்சை மையங்களும் அவற்றின் கதிர்வீச்சுகளினால் மண்டைக்கூட்டில் உள்ள எலும்புதசைகள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரக்கூடும் என்றும் அமெரிக்க குழந்தை வளர்ப்பு கல்வியகமும் எச்சரிக்கின்றன. மேலும் படைப்புத்திறன் குறைதல், பழகும் சிக்கல்கள், தூக்கமின்மை, கவனக்குறைபாடு, உடல் எடை அதிகரிப்பு என பட்டியல் நீள்கிறது.

இணையத்தொடர்பு இல்லாத, லாக் டவுனிற்கு கிராமங்களில் தஞ்சம் புகுந்துவிட்ட, நெட் பேக் கட்ட வசதியில்லாத குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வரும் போது மூன்று மாதங்களாய் விடுபட்ட பாடத்தை யார் எடுப்பார்கள்? கேரள தலித் மாணவிக்கு அடுத்து இங்கும் ஆன்லைன் வகுப்புக்கு இணைய வழியின்றி தற்கொலை செய்ய வேண்டுமா? இது இந்திய அரசியலைப்பு article 14ன் படி, பாகுபாடற்ற கல்விக்கான அடிப்படை உரிமையை உலுக்கும் குற்றம் அல்லவா? இது மொபைல் மற்றும் செயலிகளின் வணிகமா அல்லது கல்வி எனும் பெரும் வணிகத்தின் புது பரிணாமமா?

பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்த அதே துணிவு தமிழக அரசுக்கு இதிலும் வேண்டும். பள்ளிகளைப் பணித்து ஆன்லைன் கல்விமுறையை உடனே சீர் படுத்த வேண்டும். ஐ.பி.எஸ், விமானி, பொறியாளர், கலைஞர்களாக ஆகக்கூடிய குழந்தைகளின் கண்பார்வையையும் படைப்பாற்றலையும் பெற்றோர்கள் பாதுகாக்க வேண்டும். அவர்கள் கொரோனாவிடமிருந்து தப்பி ஆன்லைன் என்னும் பிசாசிடம் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Popular director issues statement against Online Classes during Coronavirus lockdown | ஆன்லைன் கற்றல் முறைக்கு எதிராக பிரபல இயக்குநர் கண்டனம்

People looking for online information on Bramma G, Coronavirus lockdown, Online Classes will find this news story useful.