கொரோனா ஊரடங்கு காரணமாக பட வாய்ப்பு இல்லாமல் தெருவில் பழம் விற்கும் நடிகர்
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா காரணமாக நான்காவது முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக தினசரி ஊதியம் பெறும் திரைப்படத் தொழிலாளர்களும், நடிகர்களும் பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்களும் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பட வாய்ப்பு இல்லாமல் நடிகர் ஒருவர் தெருவில் பழம் விற்கும் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்துள்ள 'ட்ரீம் கேர்ள்' படத்தில் நடித்துள்ள சோலங்கி திவாகர் கொரோனா வைரஸ் காரணமாக பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஏஎன்ஐ தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பட வாய்ப்பு இல்லாத காரணத்தால், குடும்பச் செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காக பழம் விற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.