கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டாரா நடிகர் ராதாரவி? - வெளியான வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டடுள்ளது. அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Actor Radharavi Shares a video about Coronavirus Lockdown | பிரபல நடிகர் ராதாரவி கொரோனா வைரஸ் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ

இந்நிலையில் நடிகர் ராதாரவி தனது குடும்பத்தினருடன் கோத்தகிரி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தில் யாருக்கும் கொரோனா  வைரஸ் அறிகுறி இல்லையென்றாலும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்துள்ளதால் அவரது வீட்டை தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடு என்று கூறி நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நடிகர் ராதாரவி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''என்னை பற்றி பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் என்னிடம் பல பேர் போன் செய்து நலம் விசாரித்தார்கள். அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றாக இருக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன். 

எல்லோரையும் தனிமைப்படுத்தி தான் ஆகவேண்டும். வேறு மாவட்டத்தில் இருந்து இந்த மாவட்டத்துக்கு வந்தால் தனிமைப்படுத்துவார்கள். கார் பாஸ் கொடுக்கும் போதே சொல்றாங்க. 14 நாட்கள் தனிமையில் இருக்கவேண்டும் என்று சொல்றாங்க. அதற்கு ஒத்துக்கொண்டால் தான் வர முடியும். இங்கே என் வீடு இருக்கிறது. அதனால் வந்திருக்கிறேன். நான் தனிமையில் தான் இருப்பேன். கலெக்டருக்கு நன்றி. சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor