சர்ச்சை : பிக்பாஸ் நடிகை வெளியிட்ட நிர்வாண போட்டோ - புனிதமான 'ஓம்' குறியீடு முன்பு இப்படியா?
முகப்பு > சினிமா செய்திகள்ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7-ல் பங்கு பெற்றவர் நடிகை சோபியா ஹயாட். இவரது பதிவுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். அப்படி சமீபத்தில் ஒரு புகைப்படம் மிகுந்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்துக்களின் புனித குறியீடான 'ஓம்' குறியீட்டின் முன்பு அவர் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவரை வறுத்துதெடுத்தனர். இதனை நியாயப்படுத்தும் வகையில் வேறு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் "நான் இந்து முஸ்லிம் மதத்தை மதிக்கிறேன். சிலர் நிர்வாணத்தை பாவமாக கருதுகின்றனர். இந்த வீடியோவை பதிவிடுவதற்கு காரணமே அதுதான். அவர்கள் பெண்மையின் வலிமையை அறியாதவர்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும் தனது பாதி நிர்வாண படத்தை வெளியிட்டு, அதில் "நான் ஒரு பெண் கடவுள். நான் எனது முழு உடலையும் காட்டி இருப்பேன். ஆனால் சிலர் பெண் கடவுளின் நிர்வாணத்தை விரும்பாதவர்கள். எனவே என் ரசிகர்களுக்கு மட்டும் அந்த புகைப்படத்தில் காட்டுவேன்" என்று கூறியுள்ளார். இந்த புகைப்படங்களால் ஹிந்தி சினிமா உலகில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.