இந்த ஊரடங்கை ரொம்ப நேசிக்கிறாங்களாம் - பிரபல ஹீரோயின் வெளியிட்ட ஃபோட்டோ வைரல்
முகப்பு > சினிமா செய்திகள்பிரகாஷ் ராஜ் இயக்கி 'தோனி' திரைப்படம் தமிழில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. தொடர்ந்து 'ரத்த சரித்திரா 2', 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'கபாலி', 'சித்திரம் பேசுதடி 2' உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான வேடங்களில் கவனம் ஈர்த்து வருகிறார்.

குறிப்பாக பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான 'கபாலி' திரைப்படத்தில் அவரது மனைவியாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ராதிகா. குறிப்பாக நீண்ட வருடங்களுக்கு பின் தன் கணவரை கண்டதும், அதிர்ச்சி ஒரு பக்கம், தவிப்பு ஒரு பக்கம் என அவரது நடிப்பை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது.
மேலும் தான் ஏற்கும் வித்தியாசமான வேடங்களாலும், தேர்ந்த நடிப்பாலும் ஹிந்தி திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினியில் இருக்கும் ஃபோட்டோவை பகிர அது வைரலாகி வருகிறது.