தமிழில் பார்த்திபனுடன் இணைந்து 'சபாஷ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யா உன்னி. இந்த படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானால் ரசிகர்கள் இன்று வரை விரும்பி பார்க்கும் படங்களில் ஒன்றாக இருக்கிறது.

இதனையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து 'கண்ணன் வருவான்', அர்ஜூனுடன் இணைந்து 'வேதம்', 'பாளையத்து அம்மன்' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், கடந்த ஜனவரி 14 ஆம் தேதி எனக்கு இந்த குட்டி இளவரசி கிடைத்தாள். எங்களுடைய குழந்தை ஐஸ்வர்யாவிற்கு உங்களுடைய ஆசிர்வாதங்கள் தேவை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Divyaa Unni, Instagram, Sabhash