தனுஷ் 'கர்ணன்'னா நான் எமன் - பிரபல நடிகர் பகிர்ந்த ஃபோட்டோ வைரல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 10, 2020 11:44 AM
நடிகர் தனுஷ் நடித்துள்ள 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 16 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க, துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்க, ஓம் பிரகாஷ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சினேகா, நவீன் சந்திரா, மெஹ்ரீன் பிர்சடா , நாசர், முனீஷ்காந்த், சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதனையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள சுருளி என்று கூறப்படும் 'D40' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்க, சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக தனுஷ் மாரி செல்வராஜ் இய்ககும் 'கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருநெல்வேலியில் தொடங்கியது.
இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க, பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடரஜான், லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் லால் தனுஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து எமன் மற்றும் கர்ணன் என்று குறிப்பிட்டுள்ளார்.