'பிக்பாஸ்' பிரபலம் ரசிகர்களுக்கு அறிவிப்பு - 'நான் பண்றது நல்ல பழக்கம் இல்லதான்...'
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 09, 2020 03:06 PM
தல அஜித்தின் 'மங்காத்தா', விஜய்யின் 'ஜில்லா', 'சென்னை 28 பார்ட் 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பரீட்சையமானவர் மகத்.

அவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் மஹத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகரெட் குடித்திருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் நிறுத்தவில்லை. இது நல்ல பழக்கம் இல்லை. நீங்கள் புகைப்பிடிக்காதவராக இருந்தால் இனி பழகாதீர்கள் என்று வேண்டுகோள்.
Tags : Mahat Raghavendra, Bigg boss, Instagram