'தர்பார்' பட வில்லனின் மகளுக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் காதலா ?
முகப்பு > சினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 'தர்பார்' படம் திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் பெங்களூரில் சந்திப்போம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியா ஷெட்டி, ஹார்ட் குறியீடை கமெண்ட் செய்திருந்தார். அதற்கு ரசிகர்களில் ஒரு சிலர் இருவருக்கும் காதலா என்றும் , மற்றும் சிலர் Made for each other என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை.