பிரியா பவானிஷங்கர் எழுதிய Love Note - ’ காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி….’!
முகப்பு > சினிமா செய்திகள்செய்தி தொகுப்பாளராக ஊடகத்தில் கால் பதித்த பிரியா பவானி ஷங்கர் பின்னர் தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இதைத் தொடர்ந்து வைபவ் நடித்த ’மேயாத மான்’ மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் 'கடைக்குட்டி சிங்கம்', 'மான்ஸ்டர்' ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி ஷங்கர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள பிரியா பவானி ஷங்கர் ராஜ்வேல் ராஜ் என்பவருக்கு எழுதியுள்ள கேப்ஷனில்: ’பத்து ஆண்டுகளுக்கு முன் நீ கல்லூரியில் சந்தோஷமான, உறுதியான என்னுடன் காதலில் விழுந்தபோது நான் ஆச்சரியப்படவில்லை.
ஆனால், இந்த ’புதிய என்னுடன்’ இருக்க முடிவு செய்தது தான் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. உடைந்துபோய் தன் துண்டங்களை தேடிக்கொண்டிருக்கும் ஒருவரோடு இருப்பது ஒன்றும் அத்தனை Funஆன விஷயம் இல்ல. நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை.
எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன்’ என்று கூறி ராஜ்வேலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.