தமிழில் 'எல்லாம் அவன் செயல்', 'சேவற்கொடி' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பாமா. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் அருண் என்ற துபாயை சேர்ந்த தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இருவருக்கும் எப்பொழுது திருமணம் என்பது குறித்து தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் நடிகை பாமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து நடிகை பாமாவிற்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தது வருகின்றனர்.
Tags : Bhama, Engagement, Instagram