''சிம்பு சார், உங்கள் படத்தை Produce பண்ணதுல...'' - பிரபல தயாரிப்பாளர் சொன்ன ஸ்டேட்மென்ட்
முகப்பு > சினிமா செய்திகள்சிம்புவின் 'மாநாடு' படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் சமீபத்தில் அதிரடியாக வெளியிடப்பட்டது. நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடைபெறாமல் தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பும் சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

இதனையடுத்து அவர்களுக்கு மேலும் சர்ப்ரைஸாக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சிம்பு தற்போது ஹன்சிகாவின் 50 வது படமான 'மகா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்பு ஜமீல் என்கிற பைலட்டாக நடித்துள்ளாராம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் மதியழகன், 'மகா' படத்தின் இரண்டாம் பாதி படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் நடைபெறவிருக்கிறது. உங்களுக்கு அன்பு சகோ. உங்கள் படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சி சார் என்று சிம்புடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.