நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புத்தகம் பற்றி வெளியிட்டுள்ள பதிவுக்கு, சைக்கோ படத்தில் நடித்த அதிதி ராவ் ஹைதாரி கமன்ட் அடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக கலக்கி வருபவர் தனுஷ். மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு, ரசிகர்களுக்கான மாஸ் கமர்ஷியல் படங்களையும் தனுஷ் நடித்து வருகிறார். நடிப்பதோடு அல்லாமல், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என இயங்கி வரும் தனுஷ், புத்தக வாசிப்பின் மீதும் தேடல் கொண்டவர். அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம், பூமணியின் வெக்கை நாவலை தழுவி படமாக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இந்த நிலையில், தான் படித்த புத்தகத்தை பற்றி சிலாகித்து, தனுஷ் தன் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எழுத்தாளர் ரவி ராய் எழுதிய, 'தி டாட்டூ ஆன் மை ப்ரெஸ்ட்' என்ற புத்தகத்தை வாசித்த தனுஷ், கண்டிப்பாக வாசிக்க வேண்டிய அருமையான புத்தகம் இது. இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது, இந்தியாவின் பிரிவினை காலகட்டத்தை உணர முடிந்தது என பதிவிட்டுள்ளார். இதையடுத்து சைக்கோ படத்தில் நடித்துள்ள அதிதிராவ் ஹைதாரி, தனுஷின் பதிவுக்கு, கேட்கவே நல்ல கதையாக இருக்கிறது என கமன்ட் அடித்துள்ளார்.
அதிதிராவ் ஹைதாரி, தனுஷ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.