www.garudabazaar.com

என்னாச்சு? காலில் காயத்துடன் கட்டுபோட்ட நிலையில் நடிகை பூஜா ஹெக்டே.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா ஹெக்டே தனது காலில் காயத்துடன் கட்டுபோட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Pooja Hegde Latest Instagram Post about Ligament Tear

Also Read | PRINCE FDFS.. ரசிகர்களுடன் படம் பார்த்து உற்சாகப்படுத்திய சிவகார்த்திகேயன்! வைரல் வீடியோ

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கில் ஒக லைலா கோஷம் (2014) படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஓக லைலா கோசம் மற்றும் ஆல வைகுண்ட புரமலு(2019) அரவிந்த சமேத வீர ராகவா (2018). துவ்வாடா ஜகந்நாதம் (2017), மகரிஷி (2019), கடலகொண்ட கணேஷ் (2019), ஹவுஸ்ஃபுல் 4 (2019), மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (2021) ஆகியவை வணிக ரீதியாக இவரது  வெற்றிப் படங்களில் அடங்கும். 2022 இல், ராதே ஷ்யாம், பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்தார்.

Pooja Hegde Latest Instagram Post about Ligament Tear

தற்போது "ஜனகனமன", சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்" ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கி உள்ளது.

Pooja Hegde Latest Instagram Post about Ligament Tear

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. 20 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையவர் பூஜா ஹெக்டே.

சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே, ஒரு மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் குடும்பத்துடன் ஒரு மாதம் சுற்றுலா சென்றார் பூஜா ஹெக்டே. சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் சல்மான் கான் நடிக்கும் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்"  படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

Pooja Hegde Latest Instagram Post about Ligament Tear

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காலில் காயத்துடன் கட்டுபோட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் இடது காலில் தசை நார் கிழிந்து விட்டது என்று கூறியுள்ளார். காயத்துக்கான காரணத்தை பூஜா ஹெக்டே குறிப்பிடவில்லை.

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. சேட்டிலைட் டிவி உரிமையை கைப்பற்றிய பிரபல சேனல்! சூப்பர்

Pooja Hegde Latest Instagram Post about Ligament Tear

People looking for online information on Ligament Tear, Pooja Hegde, Pooja Hegde Latest Instagram Post will find this news story useful.