www.garudabazaar.com

உலகச் சுற்றுலாவில் பூஜா ஹெக்டே.. அடுத்த நாடு இதுதானாம்! LATEST போட்டோவுடன் சொன்ன தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா ஹெக்டே தனது குடும்பத்துடன் உலகச்சுற்றுலா செல்லும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Pooja Hegde World Tour England Vacation Completed

Also Read | தந்தை ரஜினியுடன் படு ஜோராக கிளம்பிய ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கில் ஒக லைலா கோஷம் (2014) படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஓக லைலா கோசம் மற்றும் ஆல வைகுண்ட புரமலு(2019) அரவிந்த சமேத வீர ராகவா (2018). துவ்வாடா ஜகந்நாதம் (2017), மகரிஷி (2019), கடலகொண்ட கணேஷ் (2019), ஹவுஸ்ஃபுல் 4 (2019), மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (2021) ஆகியவை வணிக ரீதியாக இவரது  வெற்றிப் படங்களில் அடங்கும். 2022 இல், ராதே ஷ்யாம், பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Pooja Hegde World Tour England Vacation Completed

தற்போது "ஜனகனமன", சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் "கபி எய்த் கபி திவாளி" ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. 20 மில்லியன் ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையவர் பூஜா ஹெக்டே.

Pooja Hegde World Tour England Vacation Completed

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, ஒரு மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் குடும்பத்துடன் ஒரு மாதம் சுற்றுலா சென்றுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். முதல் கட்டமாக தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றார்.

Pooja Hegde World Tour England Vacation Completed

பேங்காக் கடற்கரையில் இருந்து பிகினி புகைப்படங்களை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படங்கள் செம்ம வைரலாகின. தற்போது நடிகை பூஜா ஹெக்டே இங்கிலாந்து நாட்டின் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார். இங்கிலாந்தில் எடுத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அடுத்த நாடாக அமெரிக்கா செல்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Also Read | சந்திரமுகி-2 படத்தின் ஷூட்டிங்.. ஏர்போர்ட்டில் ரசிகர்களுடன் வடிவேலு! செம போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Pooja Hegde World Tour England Vacation Completed

People looking for online information on Pooja Hegde, Pooja Hegde England Vacation will find this news story useful.