Viruman Logo Top
Kaateri logo top
www.garudabazaar.com

குடும்பத்தோடு அமெரிக்காவில் சுற்றுலா சென்ற பூஜா ஹெக்டே.. அவரே வெளியிட்ட டூர் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா ஹெக்டே தனது குடும்பத்துடன் தற்போது அமெரிக்காவில் உள்ளார்.

Pooja Hegde Latest Super Hot Photos from Newyork

Also Read | உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் லால்சிங் சத்தா..‌ ஆமிர்கானுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்!

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கில் ஒக லைலா கோஷம் (2014) படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஓக லைலா கோசம் மற்றும் ஆல வைகுண்ட புரமலு(2019) அரவிந்த சமேத வீர ராகவா (2018). துவ்வாடா ஜகந்நாதம் (2017), மகரிஷி (2019), கடலகொண்ட கணேஷ் (2019), ஹவுஸ்ஃபுல் 4 (2019), மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (2021) ஆகியவை வணிக ரீதியாக இவரது  வெற்றிப் படங்களில் அடங்கும். 2022 இல், ராதே ஷ்யாம், பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Pooja Hegde Latest Super Hot Photos from Newyork

தற்போது "ஜனகனமன", சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் "கபி எய்த் கபி திவாளி" ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Pooja Hegde Latest Super Hot Photos from Newyork

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. 20 மில்லியன் ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையவர் பூஜா ஹெக்டே.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, ஒரு மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் குடும்பத்துடன் ஒரு மாதம் சுற்றுலா சென்றுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

Pooja Hegde Latest Super Hot Photos from Newyork

முதல் கட்டமாக தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றார். அங்கு பேங்காக் கடற்கரையில் இருந்து பிகினி புகைப்படங்களை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படங்கள் செம்ம வைரலாகின.

Pooja Hegde Latest Super Hot Photos from Newyork

பின்னர் நடிகை பூஜா ஹெக்டே இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார். இங்கிலாந்தில் எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அடுத்த நாடாக அமெரிக்கா செல்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Pooja Hegde Latest Super Hot Photos from Newyork

அதன் படி தற்போது அமெரிக்காவில் உள்ள நியுயார்க் நகரத்திற்கு சென்று அங்கு பல்வேறு இடங்களில் எடுத்த புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. பூஜா ஹெக்டே வெண்ணிற ஆடையில் P எழுத்து பொறித்த சங்கிலி அணிந்து தோறறமளிக்கிறார்.

பூஜா ஹெக்டே, தனது தங்கை பூமி ஷெட்டி மற்றும் குடும்பத்தினருடன் நியூயார்க்கில் நேரம் செலவிட்டு வருகிறார்.

Also Read | துல்கர் சல்மான் & மிருணாள் நடித்த 'சீதா ராமம்'.. அமெரிக்காவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

தொடர்புடைய இணைப்புகள்

Pooja Hegde Latest Super Hot Photos from Newyork

People looking for online information on Newyork, Pooja Hegde, Pooja Hegde Latest Photos will find this news story useful.