www.garudabazaar.com

வீட்டு மொட்டை மாடி நீச்சல் குளமருகே பூஜா ஹெக்டே.. அவரே வெளியிட்ட வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா ஹெக்டே தனது வீட்டில் இருந்து நீச்சல் குளம் அருகே எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Pooja Hegde Latest Photo from Mumbai Home

Also Read | ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'மல்லிப்பூ' LYRIC VIDEO.. 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய ஸ்டில்கள்!

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கில் ஒக லைலா கோஷம் (2014) படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஓக லைலா கோசம் மற்றும் ஆல வைகுண்ட புரமலு(2019) அரவிந்த சமேத வீர ராகவா (2018). துவ்வாடா ஜகந்நாதம் (2017), மகரிஷி (2019), கடலகொண்ட கணேஷ் (2019), ஹவுஸ்ஃபுல் 4 (2019), மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (2021) ஆகியவை வணிக ரீதியாக இவரது  வெற்றிப் படங்களில் அடங்கும். 2022 இல், ராதே ஷ்யாம், பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்தார்.

Pooja Hegde Latest Photo from Mumbai Home

தற்போது "ஜனகனமன", சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்" ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Pooja Hegde Latest Photo from Mumbai Home

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. 20 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையவர் பூஜா ஹெக்டே.

சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே, ஒரு மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் குடும்பத்துடன் ஒரு மாதம் சுற்றுலா சென்றார் பூஜா ஹெக்டே.

Pooja Hegde Latest Photo from Mumbai Home

முதல் கட்டமாக தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றார். அங்கு பேங்காக் கடற்கரையில் இருந்து பிகினி புகைப்படங்களை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படங்கள் செம்ம வைரலாகின.

பின்னர் நடிகை பூஜா ஹெக்டே இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார். பின்னர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் சல்மான் கான் நடிக்கும் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்"  படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

Pooja Hegde Latest Photo from Mumbai Home

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி முன்னிருந்து தனது மும்பை வீட்டில் இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே அவ்வப்போது போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது தனது வீட்டு மொட்டை மாடியில் நின்று நீச்சல் குளம் அருகே எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். "நகரப்பெண் தன்னுடைய நகர உலகத்தில்" என தலைப்பிட்டு உள்ளார்.

Also Read | அடடே.. 'கோப்ரா' படத்தின் ஒரு வார வசூல் இம்புட்டா? ஐரோப்பிய வினியோகஸ்தர் சொன்ன சூப்பர் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Pooja Hegde Latest Photo from Mumbai Home

People looking for online information on Mumbai Home, Pooja Hegde, Pooja Hegde Latest Photo will find this news story useful.