Viruman Logo Top
www.garudabazaar.com

மான்ஹாட்டன் தீவில் பூஜா ஹெக்டே.. அட.. ஹேர் ஸ்டைல் பண்ணது இவங்கதானா? செம ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா ஹெக்டே அமெரிக்காவில் மான்ஹட்டன் தீவில் இருந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Pooja Hegde at Newyork Manhattan Island Streets

Also Read | வார நாட்களில் மாஸ் காட்டும் 'சீதா ராமம்'.. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் BOX OFFICE வசூல்!

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.  இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது "ஜனகனமன", சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் "கபி எய்த் கபி திவாளி" ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Pooja Hegde at Newyork Manhattan Island Streets

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. 20 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையவர் பூஜா ஹெக்டே.

நடிகை பூஜா ஹெக்டே, தற்போது ஒரு மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் குடும்பத்துடன் ஒரு மாதம் சுற்றுலா சென்றுள்ளதாக ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

முதல் கட்டமாக தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றார்.

Pooja Hegde at Newyork Manhattan Island Streets

அதன் பின்னர் நடிகை பூஜா ஹெக்டே இங்கிலாந்து நாட்டில் குடும்பத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இங்கிலாந்தில் எடுத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இங்கிலாந்தை தொடர்ந்து அடுத்த நாடாக அமெரிக்கா செல்வதாக சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். அதன் படி தற்போது அமெரிக்காவில் உள்ள நியுயார்க் நகரத்திற்கு சென்றுள்ளார்.

Pooja Hegde at Newyork Manhattan Island Streets

பூஜா ஹெக்டே தனது தங்கை பூமி ஷெட்டியுடன்  ஊர் சுற்றும் புகைப்படங்களை பதிவேற்றி இருந்தார். அமெரிக்க சுற்றுப்பயணத்தின் கடைசி நாளில் மான்ஹாட்டன் தீவு வீதிகளில் உலா வரும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் தனது தலை முடியை தனது தங்கை பூமி ஷெட்டி அலங்கரிப்பு செய்ததாகவும் சிகை அலங்காரத்தை தானே செய்ததாகவும் கூறியுள்ளார். பூஜா ஹெக்டேவின் இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

Also Read | 33 வகை உணவுகளுடன் பாகுபலி மீல்ஸ்.. வேற மாரி சாப்பிட்ட விஜய் தேவரகொண்டா & அனன்யா பாண்டே!

தொடர்புடைய இணைப்புகள்

Pooja Hegde at Newyork Manhattan Island Streets

People looking for online information on Manhattan Island Streets, Pooja Hegde, Pooja Hegde at Newyork will find this news story useful.