www.garudabazaar.com

PRINCE FDFS.. ரசிகர்களுடன் படம் பார்த்து உற்சாகப்படுத்திய சிவகார்த்திகேயன்! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவான 'ப்ரின்ஸ்' படம் இன்று வெளியாகி உள்ளது.

Prince FDFS SivaKarthikeyan visit Rohini Silver Screen Theatre

Also Read | 'PRINCE' படத்தில் தளபதி விஜய்யின் 'BEAST' பட ரெஃபரன்ஸ்! முழு விவரம்

இந்த ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

Prince FDFS SivaKarthikeyan visit Rohini Silver Screen Theatre

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரித்துள்ளனர்.

Prince FDFS SivaKarthikeyan visit Rohini Silver Screen Theatre

கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் மூலம் இந்த படம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 427 திரையரங்க திரைகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. அதிகாலை 4 & 5 மணி முதல் சிறப்பு காட்சிகள் தமிழகமெங்கும் முக்கிய நகரங்களில் திரையிடப்பட்டது.

Prince FDFS SivaKarthikeyan visit Rohini Silver Screen Theatre

இந்நிலையில் ப்ரின்ஸ் படத்தினை நடிகர் சிவகார்த்திகேயன், சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து கண்டு களித்தார். மேலும் பால்கனி இருக்கையில் அமர்ந்து படத்தினை காணும் ரசிகர்களை சிவகார்த்திகேயன் கையசைத்து  உற்சாகப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் & வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

Also Read | Bigg boss 6 tamil : "சொன்னது தப்புதான்.. மன்னிச்சிடுங்க.. வெளிய அனுப்பிடாதீங்க.." - மன்றாடிய தனலட்சுமி.!

தொடர்புடைய இணைப்புகள்

Prince FDFS SivaKarthikeyan visit Rohini Silver Screen Theatre

People looking for online information on Price FDFS, Prince, Sivakarthikeyan will find this news story useful.