IRAVIN NIZHAL
www.garudabazaar.com

25 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் "அரபிக்குத்து" டான்ஸ் ஆடிய பூஜா ஹெக்டே! சும்மா தீ ஆட்டம் இது.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே ஆடிய நடன வீடியோ இன்று வெளியாகி உள்ளது.

Pooja Hegde Dance Performance at Behindwoods Gold Medals

Also Read | 45 நாட்கள்.. மொட்டை போட்டு நடித்த பிரபுதேவா - "மை டியர் பூதம்" இயக்குனர்!

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி, மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.

Pooja Hegde Dance Performance at Behindwoods Gold Medals

மேலும், இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் விருதுகளையும் வென்று அசத்தி இருந்தனர்.

அந்த வகையில், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், இசை அமைப்பாளர் அனிருத், நடிகைகள் பிரியங்கா மோகன், கீர்த்தி ஷெட்டி, செல்வராகவன், சன்னி லியோன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் விருது வென்றிருந்த வீடியோக்கள், ஏற்கனவே "Behindwoods TV" யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிகம் வைரலாகியும் வருகிறது.

இவ்விழாவில் நடிகை பூஜா ஹெக்டே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரத்துக்கு நடுவே அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா, சீட்டிமார், ராமுலோ & புட்ட பொம்மா பாடல்களுக்கு தொடர்ந்து 9 நிமிடங்கள் நடனமாடி இருந்தார்.

Pooja Hegde Dance Performance at Behindwoods Gold Medals

பூஜா ஹெக்டே ஆடிய இந்த நடன வீடியோ இன்று ஜூலை 13 ஆம் நாள், புதன் கிழமை மாலை 3:30 மணிக்கு வெளியாகி உள்ளது.

முதலில் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடி பின்னர் ராமுலோ பாட்டிற்கு நடனமாடி அடுத்து அரபிக் குத்து பாடல் & ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கும் நடனமாடி இறுதியாக சீட்டிமார் பாட்டிற்கு பூஜா ஹெக்டே நடனமாடி உள்ளார்.

Pooja Hegde Dance Performance at Behindwoods Gold Medals

இதில் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடும் போது அரங்கம் விசில் சத்தத்தால் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த நடன வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

25 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் "அரபிக்குத்து" டான்ஸ் ஆடிய பூஜா ஹெக்டே! சும்மா தீ ஆட்டம் இது. வீடியோ

Pooja Hegde Dance Performance at Behindwoods Gold Medals

People looking for online information on Behindwoods Gold Medals 2022, BGM 2022, Pooja Hegde, Pooja Hegde Dance Performance, Pooja Hegde Performance at Behindwoods Gold Medals will find this news story useful.