“மணி Sir-க்கு பாட்டு எழுதுனா இவ்ளோ கவனிப்பாரா..?” - பாடலாசிரியர் சொன்ன சீக்ரெட்ஸ்..
முகப்பு > சினிமா செய்திகள்கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | Marriage Life எப்படி இருக்கு? 50 வருசத்துக்கு HONEY MOON-தான்😍 PBS கமெண்ட்.. கௌதம் கார்த்திக் ஜாலி பேட்டி.!
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வந்தது.
இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர். பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாகம் அதிக வசூலையும் பாராட்டையும் பெற்ற நிலையில், வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2-ஆம் பாகத்தில் இடம்பெறும் அகநக பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அகநக பாடல் குறித்து பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் பிரத்தியேகமாக பேட்டி அளித்த பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன், இந்த பாடல் குறித்த சூழ்நிலையை கதைச்சூழலின்படி விளக்கினார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த பாடல் குறித்து பேசிய பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன், “மணி சார்க்கு பாடல் எழுதுவது மிகவும் சிரமம். ஏனென்றால் அவரிடம் ஒரு வெர்ஷன் கொடுத்து விட்டு நகர்ந்துவிட முடியாது. அவர் திருப்தியாகும் வரை பல வெர்ஷன்கள் எழுதிக் கொடுக்க வேண்டும். ஒரு சில வார்த்தைகளில் ஒலி அல்லது சந்தன நயம் சரியாக இருக்கும், ஆனால் கவிதை மிஸ் ஆகிவிடும், இன்னொரு இடத்தில் கவிதை படிவம் அழகாக அமைந்திருக்கும், ஆனால் அது கேட்கும் பொழுது ஒரு மாதிரி இருக்கும் என்பார். அனைத்தும் சரியாக செய்துவிட்டால், அதில் பழந்தமிழ் மிஸ் ஆகி இருக்கும் அதை சுட்டிக் காட்டுவார். அதுவும் இன்று கேட்டால் புரியும் படியாகவும் இருக்க வேண்டும், பழமையான வார்த்தைகளாக இருந்தாலும் அது புதுமையாக இருக்க வேண்டும், இப்படி அனைத்து விதமாகவும் அவர் கவனித்து அந்த பாடலை சிறப்பாக வரும் வரை மீண்டும் மீண்டும் ஆப்ஷன்கள் கேட்கக் கூடியவர்.” என்று குறிப்பிட்டார்.
மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தான் அனைத்து கிரெடிட்டும் என குறிப்பிட்ட பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன், “முதலில் இந்த அகநக பாடல் சோழ தேசத்தின் மீதான குந்தவையின் உடமையுணர்வுதான், அப்படிதான் உருவானது. ஆனால் இந்த பாடலை குந்தவை - வந்தயத்தேவன் பாடலாக அற்புதமாக மாற்றியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான் சார். முதலில் அவர் இந்த பாடலுக்கான மெட்டை கொடுக்கும்போது இதற்கு என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்று இருந்தது. அவ்வளவு அற்புதமான மெலோடியாக கொடுத்திருப்பார். பிறகுதான் இதில் அந்தாதி வடிவத்தில் எழுதலாம் என முடிவு செய்தோம்” என பேசியுள்ளார்.
Also Read | Pandian Stores : கொட்டி தீர்த்த ஜீவா.. உறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. முடிவா என்னதான் சொல்றாரு?
“மணி SIR-க்கு பாட்டு எழுதுனா இவ்ளோ கவனிப்பாரா..?” - பாடலாசிரியர் சொன்ன சீக்ரெட்ஸ்.. வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Ilango Krishnan Interview On PS 2 Aga Naga Song And Kundavai
- AR Rahman Maniratnam PS2 Background Music Work Viral BTS Pics
- Ponniyin Selvan 2 PS2 Aga Naga Song Released
- Karthi Trisha Krishnan Tweet For Ponniyin Selvan 2 PS2 Aga Naga
- Ponniyin Selvan PS2 Karthi Transformation Vandhiya Thevan
- Ponniyin Selvan PS2 Aishwarya Rai Mandakini Devi Character Revealed
- Ponniyin Selvan PS2 Movie Working Glimpse Video
- Ponniyin Selvan PS2 Movie Releasing In IMAX
- Ponniyin Selvan PS2 Movie Trailer Release Update Deets
- Ponniyin Selvan PS2 Movie Dubbing Work Started
- Ponniyin Selvan PS2 Movie New Poster Released
- Ponniyin Selvan PS2 Release Date Announced