www.garudabazaar.com

PS2 பின்னணி இசை பணியில் AR ரஹ்மான் – மணிரத்னம்… லண்டனில் இருந்து வைரல் BTS ஸ்டில்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.

AR Rahman Maniratnam PS2 Background music work viral BTS pics

Images are subject to © copyright to their respective owners.

Also Read | துபாய் கடலில் மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித்குமார்.. தீயாய் பரவும் ஃபோட்டோ..   

லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. முதல் பாகமான “பொன்னியின் செல்வன்  -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வந்தது.

இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர். பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். 

AR Rahman Maniratnam PS2 Background music work viral BTS pics

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தின் முதல் பாகம் அதிக வசூலையும் பாராட்டையும் பெற்ற நிலையில், விரைவில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2-ஆம் பாகத்தில் இடம்பெறும் அகநக பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இளவரசி குந்தவையின் மனதை வெளிப்படுத்தும் இந்த பாடலில் இளவரசி குந்தவைக்கும், வந்தியத்தேவனுக்குமான உணர்வுகளும் வெளிப்படுகின்றன. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராயின் சூழ்ச்சியால் சோழ சாம்ராஜ்ஜியத்துக்குள் நிலவும் குழப்பமும், அரியணையில் ஏற்படும் தடுமாற்றமும் காட்டப்படுகின்றன. இதனிடையே ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரமை,  நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய் பழிவாங்க செய்யும் சூழ்ச்சிகள் முதல் பாகத்தில் இடம்பெற்றன.

AR Rahman Maniratnam PS2 Background music work viral BTS pics

Images are subject to © copyright to their respective owners.

இந்த அளவில் இரண்டாம் பாகத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த சூழலில்தான், லண்டனில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு பின்னணி இசையமைக்கும் பணிகளில் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வரும் BTS புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

இவற்றை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

 

AR Rahman Maniratnam PS2 Background music work viral BTS pics

Images are subject to © copyright to their respective owners.

PS2 எனப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2-ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28- ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஆஸ்கார் வென்ற The Elephant Whisperers ஆவணப்பட இயக்குநருக்கு ரூ.1 கோடி.. நேரில் கௌரவித்த தமிழக முதல்வர்.

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman Maniratnam PS2 Background music work viral BTS pics

People looking for online information on AR Rahman, Maniratnam, Ponniyin Selvan 2, PS 2 will find this news story useful.