www.garudabazaar.com

SSMB28 : மகேஷ் பாபுவின் அடுத்த படம்.. தெறி போஸ்டருடன் வெளியான ரிலீஸ் அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மகேஷ் பாபு நடித்துவரும் SSMB28 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

Actor Mahesh Babu SSMB28 Next film Release Date Revealed

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு.  தற்போது இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் #SSMB28 என இன்னும் பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான அறிவிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.

Actor Mahesh Babu SSMB28 Next film Release Date Revealed

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் கீழ் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) இப்படத்தை தயாரிக்கிறார்.

நவின் நூலி எடிட்டராகவும், கலை இயக்குனராக ஏஎஸ் பிரகாஷூம், இசையமைப்பாளராக எஸ் தமன் மற்றும் ஒளிப்பதிவாளராக பிஎஸ் வினோத் ஆகியோரும் படத்தில் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது‌. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடிக்கிறார் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Actor Mahesh Babu SSMB28 Next film Release Date Revealed

இந்த சூழ்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனுடன் மகேஷ் பாபுவின் மாஸான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. புகை பிடித்தவாறு ஸ்டைலாக மகேஷ் பாபு நடந்து வரும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Mahesh Babu SSMB28 Next film Release Date Revealed

People looking for online information on Mahesh Babu, SSMB28, Trivikram will find this news story useful.