www.garudabazaar.com

AGA NAGA: PS - 2 படத்தின் முதல் சிங்கிள் . வெளியான கார்த்தி & த்ரிஷாவின் ரொமான்டிக் பாடல்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் -2,  படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Ponniyin Selvan 2 PS2 Aga Naga Song Released

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "உடலினை உறுதிச் செய்".. சமந்தாவின் வெறித்தனமான உடற்பயிற்சி.. இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Ponniyin Selvan 2 PS2 Aga Naga Song Released

Images are subject to © copyright to their respective owners.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. 

இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

Ponniyin Selvan 2 PS2 Aga Naga Song Released

Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் -2 படம் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் அதற்குரிய திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan 2 PS2 Aga Naga Song Released

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில்  பொன்னியின் செல்வன் - 2 படத்தின்  அக நக எனும் முதல் சிங்கிள் பாடல், வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் பின்னணி இசையாக கவனம் பெற்ற இந்த பாடல், தற்போது முழு வடிவமாக வெளியாகி உள்ளது.

இந்த பாடலை ஏ. ஆர். ரஹ்மான் இசையில், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுதி உள்ளார். பாடகி சக்திஶ்ரீ கோபாலன் பாடியுள்ளார்.

Also Read | டிவிட்டரில் ரொமான்ஸ் செய்த வந்தியத்தேவன் & குந்தவை நாச்சியார்! செம்ம வைரல் ட்வீட்ஸ்😍

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan 2 PS2 Aga Naga Song Released

People looking for online information on Aga Naga Song, Karthi, Ponniyin Selvan Part 2, PS2, Trisha Krishnan will find this news story useful.