www.garudabazaar.com
iTechUS

PS2: 'பொன்னியின் செல்வன் - 2' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போ? FANS எதிர்பார்த்த முக்கிய அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் -2, படத்தின் புதிய அப்டேட் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Ponniyin Selvan PS2 Movie Trailer Release Update Deets

Also Read | வடிவேலு தாயாரின் இறுதிச்சடங்கில்.. அஞ்சலி செலுத்திய மு.க. அழகிரி.. உருக்கமான வீடியோ

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின்முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Ponniyin Selvan PS2 Movie Trailer Release Update Deets

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. 

இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan PS2 Movie Trailer Release Update Deets

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Ponniyin Selvan PS2 Movie Trailer Release Update Deets

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நடுவே பொன்னியின் செல்வன் - 2 படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்- 2.. படத்தின் தாறுமாறான அடுத்த அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan PS2 Movie Trailer Release Update Deets

People looking for online information on Ponniyin Selvan, PS2 Movie, PS2 Movie Trailer, PS2 Movie Trailer Release Update will find this news story useful.