www.garudabazaar.com

PS2 கிளிம்ப்ஸ்.. வைரலாகும் மற்றொரு ஐஸ்வர்யா ராயின் கேரக்டர் லுக்..! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் -2,  கிளிம்ப்ஸ் வீடியோவில் உள்ள ஐஸ்வர்யா ராயின் மற்றொரு கதாபாத்திர லுக் வைரலாகி வருகிறது.

Ponniyin Selvan PS2 Aishwarya Rai Mandakini Devi Character Revealed

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'லால் சலாம்' படத்தில் பிரபல நடிகரின் மனைவி?.. 30 வருடங்களுக்கு பிறகு நடிப்பில் ரீ- என்ட்ரி!

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. 

இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

Ponniyin Selvan PS2 Aishwarya Rai Mandakini Devi Character Revealed

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் -2 படம் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் அதற்குரிய திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan PS2 Aishwarya Rai Mandakini Devi Character Revealed

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் படக்குழு பொன்னியின் செல்வன் - 2 படத்தின் படப்பிடிப்பு மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஐஸ்வர்யா ராயின் மற்றொரு கதாபாத்திரமான மந்தாகினி தேவி (ஊமை ராணி) கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது.

இந்த கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலேயே வெளிப்பட்டு விடும் என்றாலும் தற்போது வெளியாகி உள்ள இந்த கிளிம்ப்ஸ் வீடியோவிலும் அந்த காட்சியின் சில துணுக்குகள் இடம் பெற்றுள்ளன.  வீரபாண்டியன் மனைவியான மந்தாகினி தேவி, நந்தினியின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. நந்தினி & மந்தாகினி தேவி என இரண்டு கதாபாத்திரங்களிலும் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளது குறிப்படத்தக்கது.

Also Read | VIDEO: தங்கலான் ஷூட்டிங்கில் கிரிக்கெட்.. பிளிண்டாப் ஸ்டைலில் பவுலிங் போட்ட பா. ரஞ்சித்..!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan PS2 Aishwarya Rai Mandakini Devi Character Revealed

People looking for online information on Aishwarya rai, Aishwarya Rai Mandakini Devi Character, Ponniyin Selvan Part 2 will find this news story useful.