Pattamboochi

வைரலான ‘வாரிசு’ போஸ்டர்கள்… விஜய்யை ஸ்டைலாக ’click’ செய்தது இந்த பிரபலம்தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் அறிமுகப்போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகின.

Photographer G venkatRam shot vijay for firstlook

Also Read | இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு திருமண நிச்சயதார்த்தம்… குவியும் வாழ்த்துகள்… Viral pic

வாரிசு போஸ்டர்கள்

கடந்த ஜுன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் தனது 48வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்த படமான ‘ வாரிசு’ படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகின. அந்த போஸ்டர்களில் விஜய் வசிகரமாகவும், ஸ்டைலாகவும் இருப்பதாக ரசிகர்கள் சிலாகித்து வந்தனர். அந்த மூன்று போஸ்டர்களும் கடந்த இரண்டு நாட்களாக ட்ரண்டிங்கில் இருந்தன. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.

Photographer G venkatRam shot vijay for firstlook

புகைப்படக் கலைஞர்

இந்த போஸ்டர்களுக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இயக்குனர் வம்சி விஜய்யை வைத்து சென்னையில் ஒரு போட்டோஷூட்டை நடத்தினார். அது சம்மந்தமான செய்திகள் அப்போது வைரலாகின. அந்த போட்டோஷுட்டில் விஜய்யை புகைப்படம் எடுத்தவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஜி வெங்கட்ராம் என்பவர்தான்.  அவர் எடுத்த புகைப்படங்கள்தான் போஸ்டர்களில் பயன்படுத்தப் பட்டு உள்ளன. ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில் வெங்கட்ராமுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இவர் மாஸ்டர் படத்துக்கும் இதுபோல ஸ்டைலாக விஜய்யை போட்டோஷூட் செய்தவர் என்பது குறிப்பிடத்தகது. பல திரையுலக பிரபலங்களுக்கும் ஆஸ்தான புகைப்படக் கலைஞராக இருந்து வருபவர் வெங்கட்ராம். இவர் நடிகைகளை வைத்து எடுத்து வெளியிடும் பிரபலங்கள் காலண்டரும் வெகு பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Photographer G venkatRam shot vijay for firstlook

வாரிசு ஷூட்டிங்

வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத், சென்னை ஆகிய இடங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது.  இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் பணியாற்ற உள்ளார்.  இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து சரத்குமார் நடிக்கிறார். நடிகர் பிரபு, ஷ்யாம், ஜெய சுதா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு , நடிகை சங்கீதா, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது சென்னையில் முக்கியமான காட்சிகளைப் படக்குழு படமாக்கி வருகிறது.

Also Read | “நானும் பெரிய ஆள்தான்..” “கடவுளிடம் விட்டுவிடுங்கள்..” இயக்குனர் செல்வராகவனின் திடீர் Tweet

தொடர்புடைய இணைப்புகள்

Photographer G venkatRam shot vijay for firstlook

People looking for online information on Photographer G venkatRam, Varisu Movie, Vijay will find this news story useful.