Pattamboochi

இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு திருமண நிச்சயதார்த்தம்… குவியும் வாழ்த்துகள்… Viral pic

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குனர் பி எஸ் மித்ரனின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

PS mithran got engaged viral picture

Also Read | அடடே.. ‘மாமனிதன்’ படத்துல விஜய் சேதுபதியின் மகனா நடிச்சது இந்த இயக்குநரின் மகனா.?

இரும்புத்திரை

விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பி எஸ் மித்ரன். சைபர் கிரைம் தொடர்பான குற்றப்பின்னணியில் உருவான அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து, மித்ரன் மேல் ரசிகர்களின் கவனத்தைக் குவித்தது. இந்த படத்துக்குப் பிறகு மித்ரன் சிவகார்த்திகேயன், அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் உருவான ‘ஹீரோ’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

PS mithran got engaged viral picture

சர்தார்

இதையடுத்து மித்ரன் இப்போது கார்த்தி நடிக்கும் ’சர்தார்’ படத்தை இயக்கி வருகிறார். சர்தார் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமாகி இருந்தது. அதன் பின்னர், கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் சர்தார் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது. கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு லைலா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சர்தார் படத்துக்கு ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், சர்தார் படத்திற்கு இசை அமைத்து வருகிறார். மேலும், பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் வெளிநாடு ஒன்றில் படத்தில் வில்லன் சம்மந்தப்பட்ட காட்சிகளை மிகப்பிரம்மாண்டமாக படக்குழு படமாக்கியது.

PS mithran got engaged viral picture

நிச்சயதார்த்தம்

இந்நிலையி இயக்குனர் மித்ரனுக்கு, ஆஷாமீரா என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் தற்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவி கவனம் பெற்று வருகின்றன. இதையடுத்து ரசிகர்கள் மித்ரன் மற்றும் ஆஷாமீரா ஆகிய இருவருக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

Also Read | “நானும் பெரிய ஆள்தான்..” “கடவுளிடம் விட்டுவிடுங்கள்..” இயக்குனர் செல்வராகவனின் திடீர் Tweet

PS mithran got engaged viral picture

People looking for online information on பி எஸ் மித்ரன், PS Mithran, PS mithran got engaged will find this news story useful.