Pattamboochi

'வாரிசு' படத்தின் தாறுமாறான மூன்றாவது லுக் போஸ்டர்.. விஜய் சும்மா தெறியா இருக்காரு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Vijay Starring Varisu Movie Third Look Poster Released

Also Read | தாய்லாந்து நாட்டில் ஹனிமூன்.. நயன்தாரா - விக்னேஷ் சிவன் வெளியிட்ட LATEST டூர் PHOTOS!

இன்று நடிகர் விஜய் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு வாரிசு படக்குழு நேற்று முதல் லுக் போஸ்டரை வெளியிட்டது. இன்று காலை இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது.அதனைத் தொடர்ந்து இன்று மாலை மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டரில் இரு சக்கர வாகனம் மீது விஜய் அமர்ந்து இருப்பது போலவும், சூரிய ஒளியில் விஜய் முகம் பிரதிபலிக்கும் வகையில் உள்ள புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் விஜய்யின் தலைமுடி ஸ்டைல் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

Vijay Starring Varisu Movie Third Look Poster Released

இந்த வாரிசு படத்துக்கு தெலுங்கில் 'வாராசுடு' எனவும் பெயரிடப்பட்டுள்ளது.  The Boss Returns என்று துணை தலைப்பு இரண்டு மொழிகளின் போஸ்டரிலும் இடம்பெற்றுள்ளது. 

இப்படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத், சென்னை ஆகிய இடங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது.  இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் பணியாற்ற உள்ளார்.  இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.

Vijay Starring Varisu Movie Third Look Poster Released

இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து சரத்குமார் நடிக்கிறார். நடிகர் பிரபு, ஷ்யாம், ஜெய சுதா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு , நடிகை சங்கீதா, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | அடடே.. 777 சார்லி படத்த பார்த்துட்டு ரஜினிகாந்த் சொன்ன ரிவ்யூ... நெகிழ்ந்து போன நடிகர்!

Vijay Starring Varisu Movie Third Look Poster Released

People looking for online information on Thalapathy 66 Movie, Thalapathy Vijay Varisu Movie, Varisu Movie, Varisu Movie Third Look Poster will find this news story useful.