Pattamboochi

சிவகார்த்திகேயன் - பவர் ஸ்டார் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு.. இதான் காரணமா? வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் & பவர் ஸ்டார் பவன் கல்யாண் சந்திப்பு நடந்துள்ளது.

SivaKarthikeyan Pawan Kalyan Meet at Prince Producer family wedding

Also Read | விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீசான மாமனிதன் படத்தில் மங்காத்தா REFERENCE.. இதான் காரணமா?

பிரபல தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர்.  ஜனசேனா எனும் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் & பவன் கல்யாண் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் தயாரிப்பாளர் சுனில் நரங்கின் மகள் ஜான்வி நரங்கின் திருமணம் ஐத்ராபாத்தில் நடந்தது. இந்த திருமண நிகழ்வில் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக சிரஞ்சீவி, நாகார்ஜூனா, பவன் கல்யாண், நானி, சிவகார்த்திகேயன், கோபி சந்த், சைதன்யா அக்கினேனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

SivaKarthikeyan Pawan Kalyan Meet at Prince Producer family wedding

இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயனிடம் பவன் கல்யாண் சந்தித்து பேசும் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் மணமக்கள் ஆதித்யா - ஜான்வியை வாழ்த்தினார்.  புஷ்கூர் ராம் மோகன் ராவ் இந்நிகழ்வில் சிவகார்த்திகேயன் உடன் இருந்தார்.

SivaKarthikeyan Pawan Kalyan Meet at Prince Producer family wedding

கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் உலகெங்கும் வெற்றிகரமாக  (13.05.2022) அன்று ரிலீசாகி 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது.

டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

SivaKarthikeyan Pawan Kalyan Meet at Prince Producer family wedding

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த பிரின்ஸ் படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இப்படம்  தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. பிரின்ஸ் படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

 

Also Read | பிரபல போட்டோகிராபருடன் சேர்ந்து நஸ்ரியா நடத்திய போட்டோஷூட்.. செம்ம காஸ்டியூம்ல!

 

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Pawan Kalyan Meet at Prince Producer family wedding

People looking for online information on Pawan Kalyan, Prince Movie Producer, Prince Producer family wedding, Sivakarthikeyan will find this news story useful.