VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் இணைந்த பிரபல 80s ஹீரோயின்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் படப்பிடிப்பில் பிரபல நடிகை இணைந்துள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Vijay with actress Kushbu in the set of Varisu Movie

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் வேற மாரி 2nd LOOK போஸ்டர்.. எப்படி இருக்கு?

தளபதி விஜய்யின் 66வது படமான வம்சி பைடிபள்ளி மற்றும் தில் ராஜுவின் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & இரண்டாவது லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

தளபதி விஜய் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

Vijay with actress Kushbu in the set of Varisu Movie

தமிழில் வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தெலுங்கில் வாராசுடு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு என்பதால், வாரிசு படத்திற்கு பொருத்தமான தலைப்பு. 

Vijay with actress Kushbu in the set of Varisu Movie

ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய பட்டாளமே நடிக்கிறது. தற்போது, ​​அனைத்து நடிகர்களும் பங்கேற்கும் ஒரு நீண்ட மற்றும் முக்கியமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்று தனது 48வது பிறந்தநாளிலும் விஜய் இப்படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

Vijay with actress Kushbu in the set of Varisu Movie

இந்நிலையில்  இப்படப்பிடிப்பில் நடிகை குஷ்பு இணைந்துள்ளார்.  விஜய் உடன் அவர் எடுத்த போட்டோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. குஷ்பு, ஏற்கனவே விஜய் உடன் மின்சார கண்ணா, வில்லு படங்களில் நடித்துள்ளார்.

Vijay with actress Kushbu in the set of Varisu Movie

வாரிசு படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் இணைந்து கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

Also Read | ஜாலியோ ஜிம்கானா.. சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'பீஸ்ட்' படத்தின் வேற லெவல் BTS போட்டோ!

Vijay with actress Kushbu in the set of Varisu Movie

People looking for online information on Kushbu, Thalapathy 66 Movie, Thalapathy Vijay Varisu Movie will find this news story useful.