IndParty
www.garudabazaar.com

நடிகை சித்ரா திடீர் மரணம்... குமரன் வெளியிட்ட வீடியோ... "அவருக்கு மிகப் பெரிய ஒய்வு"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

pandiyan stores kumaran on chitra deathகுமரன் வெளியிட்ட வீடியோ.

இந்நிலையில் தற்போது அவருடைய சீரியல் துணையான குமரன், சித்ராவின் மரணத்திற்கு இரங்கல் பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "சித்ரா எப்படி இறந்தார் என்பது பற்றி நான் பேச வரவில்லை. அதை பேசினால் சித்ரா மீண்டும் வரப்போவதும் இல்லை. என்னுடைய வருத்தம் எல்லாம் அவர் யாராவது ஒருத்தரிடமாவது தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி இருக்கலாம் என்பதே. பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் 'உங்களால் தான் பிரச்சனையே வருது' என்று கிண்டல் செய்வார். காரணம் அவருக்கு வேறு வேலைகள் இருந்தும், நான் நடிக்க வந்து விடுவதால் அவரும் நடிக்க வேண்டி இருப்பதாக விளையாட்டாக கூறுவார். சித்ரா ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தார். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஓய்வு தேவைப் படவில்லை. அவர் அந்த பிஸி வாழ்க்கையை தான் விரும்பினார்.அவருக்கு இப்பொழுது ஒரு மிகப்பெரிய ஓய்வு கொடுக்கப்பட்ட இருக்கிறது" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

நடிகை சித்ரா திடீர் மரணம்... குமரன் வெளியிட்ட வீடியோ... "அவருக்கு மிகப் பெரிய ஒய்வு" வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

pandiyan stores kumaran on chitra deathகுமரன் வெளியிட்ட வீடியோ.

People looking for online information on Kumaran, Pandiyan Stores will find this news story useful.