வெளியாகி 19 நாட்கள்... இன்னும் நிறையும் கூட்டம்... தியேட்டர்களில் மாஸ்டர் செய்த மாயாஜாலம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரித்துள்ளார்.அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த மாஸ்டர் திரைப்படத்தில் இரு சூப்பர்ஸ்டார்களான தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரங்களுக்கு இடையே மோதல் பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்கு கொண்டு வரக்கூடியவை.

fans celebrate master after 19 days தியேட்டர்களில் மாஸ்டர் செய்த மாயாஜாலம்

கடந்த வருடம் உலகமெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த காலத்தில் ஐந்து மாதங்களுக்கும் மேல் கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் தியேட்டர், சினிமா தொழில் சார்ந்தவர்களுக்கும், தின கூலிகளுக்கும் மிகப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனை போக்கும் விதமாக விஜய் போன்ற மாஸ் ஹீரோவின் படம் தியேட்டர்களில் வெளியானது தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. இந்நிலையில் கடந்த பொங்கலன்று வெளியாகி 19 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் தியேட்டர்களில் மாஸ்டர் படத்திற்கு குடும்பமாக ரசிகர்கள் வருவதை பார்க்க முடிகிறது. அதற்கு சான்றாக தற்போது கும்பகோணம் வாசு தியேட்டரில் ரசிகர்கள் கூட்டமாக மாஸ்டர் படத்திற்கு டிக்கெட் எடுக்க காத்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

fans celebrate master after 19 days தியேட்டர்களில் மாஸ்டர் செய்த மாயாஜாலம்

ஜனவரி 29 அன்று ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழ் திரைப்படமான மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் ப்ரீமியர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் படத்தின் பிரத்யேக டிஜிட்டல் வெளியீட்டை இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29 முதல் காணலாம்.

Tags : Master, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

fans celebrate master after 19 days தியேட்டர்களில் மாஸ்டர் செய்த மாயாஜாலம்

People looking for online information on Master, Vijay will find this news story useful.