www.garudabazaar.com

'தங்கலான்'.. ஷூட்டிங்கில் பா. ரஞ்சித்.. விக்ரம் எடுத்த வைரல் ஃபோட்டோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Pa Ranjith shared Thangalaan Movie Shooting Spot Images

Also Read | லேட்டஸ்ட் லுக்கில் அஜித்.. பிறந்தநாளில் AK-வை சந்தித்த 'துணிவு' பட பிரபலம்!

'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்  “நட்சத்திரம் நகர்கிறது”  படத்தை  இயக்கினார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

"நட்சத்திரம் நகர்கிறது" படத்தைத் தொடர்ந்து, விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.

Pa Ranjith shared Thangalaan Movie Shooting Spot Images

இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Pa Ranjith shared Thangalaan Movie Shooting Spot Images

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Pa Ranjith shared Thangalaan Movie Shooting Spot Images

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் பா. ரஞ்சித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கையில் மைக்குடன் பா. ரஞ்சித் இந்த புகைப்படங்களில் காட்சியளிக்கிறார்.

Also Read | போலீஸாக நாக சைதன்யா..வெங்கட் பிரபு இயக்கும் 'NC22'.. மிரட்டலான Announcement போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith shared Thangalaan Movie Shooting Spot Images

People looking for online information on Pa Ranjith, Thangalaan, Thangalaan Movie Shooting Spot, Vikram will find this news story useful.