www.garudabazaar.com

லேட்டஸ்ட் லுக்கில் அஜித்.. பிறந்தநாளில் AK-வை சந்தித்த 'துணிவு' பட பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Ajith Kumar AK Thunivu Latest Photo with Lyricist Vaisagh

Also Read | 3D-யில் உருவாகும் கைதி படத்தின் இந்தி ரீமேக்.. அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான மிரட்டலான டீசர்!

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பாளர் போனி கபூர்  தயாரிக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ajith Kumar AK Thunivu Latest Photo with Lyricist Vaisagh

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‌

'துணிவு' படத்தின் டப்பிங் பணிகள் கடந்த மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகின்றது. நடிகர்கள் அஜித் குமார், மஞ்சு வாரியர், பிரேம் குமார், வல்லவன், பிக்பாஸ் அமீர் ஆகியோர் டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

Ajith Kumar AK Thunivu Latest Photo with Lyricist Vaisagh

இந்நிலையில் 'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள 'சில்லா சில்லா' பாடலை எழுதிய பாடலாசிரியர் வைசாக் தனது டிவிட்டர் பக்கத்தில்  "தன்னுடைய இந்த பிறந்த நாளை இதைவிட சிறப்பாக்க எதானாலும் முடியாது" எனக் கூறி நடிகர் அஜித் குமாரை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார் காதில் கடுக்கனுடன்  தாடியை மாற்றியமைத்து கருப்பு நிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பாடலாசிரியர் வைசாக்கிற்கு தெரிவித்து வருகின்றனர்.

 

Also Read | போலீஸாக நாக சைதன்யா..வெங்கட் பிரபு இயக்கும் 'NC22'.. மிரட்டலான Announcement போஸ்டர்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK Thunivu Latest Photo with Lyricist Vaisagh

People looking for online information on Ajith Kumar, AK Thunivu Latest Photo, Lyricist Vaisagh, Thunivu, Vaisagh will find this news story useful.