www.garudabazaar.com

"இந்த சீசன் BIGGBOSS-ல இவரை தான் எனக்கு பிடிக்கும்".. மனம் திறந்த சீசன்-1 டைட்டில் வின்னர் ஆரவ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக, அனைத்து சீசன்களும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது போலவே, தற்போதைய சீசனும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Bigg Boss Season 1 Winner Arav about Vikraman

தமிழில் முதல் சீசனின் டைட்டில் வின்னராக ஆரவ் தேர்வாகி இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலம் அடைந்த ஆரவ், அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அப்படி ஒரு சூழலில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவன் படத்திலும் வில்லனாக ஆரவ் களமிறங்கி உள்ளார்.இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், ஆரவ் வரும் காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Bigg Boss Season 1 Winner Arav about Vikraman

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், கலகத் தலைவன் திரைப்படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவலை Behindwoods நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இதில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் குறித்து பேசி இருந்த ஆரவ், "நான் போயிருந்த ஃபர்ஸ்ட் சீசனே முழுதாக பார்க்கவில்லை. அதன் பின்னர் எந்த சீசனையும் நான் பாக்கல. ஆனால் இப்போது உட்கார்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன். இந்த சீசனை தான் நான் தினந்தோறும் உட்கார்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன். எந்த சீசனுமே நான் அப்படி உட்கார்ந்து பார்க்கவில்லை.

Bigg Boss Season 1 Winner Arav about Vikraman

இந்த சீசனில் விக்ரமனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு VJ-வாக இருக்கும் போது எனக்கு அவரை மிகப் பிடிக்கும். மிகவும் Matured ஆக மற்றும் ஸ்ட்ராங்கான கேள்விகள் அவரிடம் இருக்கும். அதனை பின்பற்றும் போது எனக்கு விக்ரமனை பிடிக்கும். அவர் சிறப்பாக ஆடுவதாக எனக்கு தோன்றுகிறது" என ஆரவ் தெரிவித்தார்.

"இந்த சீசன் BIGGBOSS-ல இவரை தான் எனக்கு பிடிக்கும்".. மனம் திறந்த சீசன்-1 டைட்டில் வின்னர் ஆரவ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Season 1 Winner Arav about Vikraman

People looking for online information on Arav, BIGG BOSS season 6, Vikraman will find this news story useful.