www.garudabazaar.com

"விக்ரமன் கண்டிப்பா ஃபைனல் போவாரு.. BIGG BOSS மகேஸ்வரி EXCLUSIVE கணிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன பிறகு மகேஸ்வரி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

BIGGBOSS Season 6 Tamil Maheshwari Exclusive About Vikraman

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள்  பங்கேற்றனர்.

BIGGBOSS Season 6 Tamil Maheshwari Exclusive About Vikraman

பிக்பாஸ் நிகழ்ச்சி, அடுத்தடுத்து விறுவிறுப்பு நிறைந்த டாஸ்க்குகள் மற்றும் நிகழ்வுகளால் சென்று கொண்டிருக்கிறது. எப்போது எந்த சம்பவம் நடைபெறும் என்பதை சில நேரம் யூகிக்க முடியாத அளவுக்கு  பரபரப்பு சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறும். இதனால் ரசிகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக நடிகர் ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.   இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அசல் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். கடந்த வாரம் ஷெரினா வெளியேறினார். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை   மகேஸ்வரி எலிமினேட் ஆகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

BIGGBOSS Season 6 Tamil Maheshwari Exclusive About Vikraman

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு மகேஸ்வரி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற சம்பவங்கள், சக போட்டியாளர்கள், வீட்டுக்குள் நடந்த சண்டைகள், தனது குடும்பம் பற்றிய பல விடயங்கள் குறித்து இந்த பேட்டியில் பேசியுள்ளார். "விக்ரமன் கண்டிப்பாக நூறு சதவீதம் ஃபைனல் வருவார். தனா & அசீம் இல்லாத ஒன்னு விக்ரமன்ட்ட இருக்குன்னா அது சரியான நிலைப்பாடு கொண்டவர். மற்றவர்கள் அவரை Influence பண்ண முடியாது. ஜோக் அடித்தால் ஹர்ட் ஆவார் மற்றபடி விக்ரமன் மிகவும் பலமான போட்டியாளர்" என மகேஸ்வரி கூறியுள்ளார்.

"விக்ரமன் கண்டிப்பா ஃபைனல் போவாரு.. BIGG BOSS மகேஸ்வரி EXCLUSIVE கணிப்பு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

BIGGBOSS Season 6 Tamil Maheshwari Exclusive About Vikraman

People looking for online information on Bigg boss, Bigg Boss season 6 Tamil, Maheshwari, Vikraman will find this news story useful.