www.garudabazaar.com

சீரியல்ல.. அதுவும் Ex பிக்பாஸ் போட்டியாளர் பாவனியுடனே நடித்துள்ள Bigg Boss விக்ரமன்.. இது எப்ப?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

bigg boss vikraman and pavani reddy acted togethor in serial

Also Read | தாய் இறந்த 48 நாளில் தந்தை மரணம்! சகோதரர் உட்பட ஒரே வருடத்தில் 3 இழப்புகள்..நொறுங்கிய மகேஷ் பாபு

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி உள்ளே வந்தார்.

இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி வெளியேற்றப்பட்டார்.

இந்நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பங்கேற்றுள்ளார் விக்ரமன்.  இவர் விஜய் டிவியில் 2016 ஆம் ஆண்டில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' எனும் சீரியலில் நடித்தார். இந்த சீரியலின் சில காடசிகள் தற்போது வைரலாகி வருகின்றன.  இதன் துவக்க வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 2016 ஆம் ஆண்டு  ஒளிபரப்பான இந்த தொடர் சில எபிசோட்களாக ஒளிபரப்பாகியது.

இதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பான EMI தவணை முறை வாழ்க்கை எனும் தொடரிலும் விக்ரமன் நடித்துள்ளார். இந்த சீரியலின் காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இதில்தான் முந்தைய பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான பாவனி ரெட்டி நடித்துள்ளார் என்பதும், அவருடன் விக்ரமன் நடித்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

Also Read | ‘10 வருஷத்துக்கு அப்றமும் அதே ஆப்ஷன்தான்’ – உதயநிதியின் பழைய ட்வீட்.. கிருத்திகாவின் Viral Reaction

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss vikraman and pavani reddy acted togethor in serial

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, EMI, Pavani, Vikraman, Vikraman acted in serials will find this news story useful.