www.garudabazaar.com

ரணகளத்துக்கு நடுவுல.. விக்ரமன், மைனா நந்தினியின் "மேகம் கருக்காதா".. 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் ஒவ்வொரு நாளும் பரபரப்பான கட்டங்களுடன் தான் சென்று கொண்டிருக்கிறது.

Vikraman and nandhini dance for megham karukatha song in biggboss

போட்டியாளர்கள் மாறி மாறி கலகலப்பாக இருக்கும் அதே வேளையில், டாஸ்க் என வந்து விட்டால் அங்கே பல சண்டைகள் உள்ளிட்ட விஷயங்கள் தான் அரங்கேறுகிறது.

முதல் இரண்டு வாரங்கள் ஜாலியாகவும், சில நேரங்களில் சண்டை போட்டும் வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் மூன்றாவது வாரம் ஏகப்பட்ட சண்டைகள் வெடித்திருந்தது.

இதற்கு காரணம் பொம்மை டாஸ்க் பெயரில் போட்டியாளர்கள் இடையே நடந்த தள்ளு முள்ளு தான். இதில் சிக்கி ஷெரினா கீழே விழுந்து காயம் ஏற்பட, பின்னர் எல்லாமே தலைகீழாக மாறி இருந்தது. இரண்டு தரப்பாக பிரிந்து கொண்டு தொடர்ந்து இந்த விவகாரத்தில் சண்டை போட்டும் வந்தனர். இதன் பின்னர் வார இறுதியில் வந்த கமல், அனைத்திற்கும் தீர்வு கண்டிருந்தார்.

Vikraman and nandhini dance for megham karukatha song in biggboss

தொடர்ந்து, மீண்டும் கலகலப்பான மோடில் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் போதே தற்போது ஃபேக்டரி டாஸ்க் என்ற பெயரில் தொடர்ந்து பல்வேறு சண்டைகள் அரங்கேறியும் வருகிறது. இதில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை இனிப்பு கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கடைகளை வைத்திருக்கின்றனர். இந்த இனிப்பு பொருட்களுக்கான அட்டைகளை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.

Vikraman and nandhini dance for megham karukatha song in biggboss

இதில், மணிகண்டன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் பொருட்களை கன்வேயரில் இருந்து எடுக்கும் போது அவர்களுக்கு இடையே சண்டையும் ஏற்பட்டு மாறி மாறி முட்டி மோதிக் கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து, அமுதவாணன் மற்றும் விக்ரமன் ஆகியோரும் வார்த்தை போரில் ஈடுபடுகின்றனர். பெர்சனலாக தாக்கி பேசுவதாக விக்ரமன் அமுதவாணனை குறிப்பிட, மறுபக்கம் விக்ரமன் பொய் பேசுவதாகவும் அமுதவாணன் தெரிவிக்கிறார். இதுவும் நீண்டு கொண்டே போக பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பல களேபரங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.

அதே போல, எதிர் அணியில் உள்ள போட்டியாளர்கள் விதிகளை மீறி செயல்படுவதையும் பிக்பாஸிடமே நேரடியாக புகார் கூறுகிறார் தனலட்சுமி. இப்படி டாஸ்க் என்று வந்தாலே பிக்பாஸ் வீட்டில் வழக்கமாக ஏதாவது பிரச்சனைகள் நேர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

Vikraman and nandhini dance for megham karukatha song in biggboss

இதனிடையே, விக்ரமன் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் இணைந்து மேகம் கருக்காதா பாடலுக்கு நடனமாடியது தொடர்பான வீடியோ, இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது போல, படத்தின் பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது.

அதிலும் 'மேகம் கருக்காதா' பாடலும், தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா உள்ளிட்டோர் அதில் போடும் டான்ஸ் மூவ்மென்ட்களும் அதிகம் ட்ரெண்ட் ஆகி இருந்தது. பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு அதிகம் வைரல் ஆக்கி இருந்தனர்.

 

அப்படி ஒரு சூழலில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி ஆகியோரும் இணைந்து 'மேகம் கருக்காதா' பாடலுக்கு நடனமாடி உள்ளனர். ஒவ்வொரு ஸ்டெப்பாக கற்றுக் கொண்டு மெல்ல மெல்ல அவர்கள் மிகவும் ஜாலியாக நடனமாடும் இந்த வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman and nandhini dance for megham karukatha song in biggboss

People looking for online information on BIGGBOSS TAMIL, Myna Nandhini, Vikraman will find this news story useful.