www.garudabazaar.com

"நான் சொன்னா சீரியஸா 'Portray' பண்றீங்க".. இது என்ன சண்டை.. விக்ரமன் Vs அமுதவாணன்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் முழுக்க முழுக்க பல திருப்புமுனைகளுடன் தான் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

amudhavanan and vikraman in arguement in biggboss 6 tamil

Also Read | "இப்பதான் பாத்தேன்".. 'ரஞ்சிதமே' முழு வீடியோ பார்த்துட்டு தமன் போட்ட ட்வீட்!

விறுவிறுப்பு நிறைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியும் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் ரசிகர்களும் இதனை அதிகம் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என தானாக முன் வந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார் ஜிபி முத்து. இதற்கு அடுத்தபடியாக, சாந்தி, அசல் கோலார் மற்றும் ஷெரினா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் முறையே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தனர்.

தொடர்ந்து, சமீபத்தில் நடந்து முடிந்த எபிசோடில் தோன்றி இருந்த கமல்ஹாசன், பிக்பாஸ் போட்டியாளர்கள் வீட்டிற்குள் விதிமுறைகளை சரிவர பின்பற்றாதது குறித்து ஆவேசமாக நிறைய கருத்துக்களை பேசி இருந்தார். இதனால் வரும் வாரங்களில் அதனை போட்டியாளர்கள் வீதிமீறல்களில் ஈடுபட மாட்டார்கள் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தனர்.

amudhavanan and vikraman in arguement in biggboss 6 tamil

இதனையடுத்து, புதிய டாஸ்க்காக ஸ்வீட் ஃபேக்டரி என்ற பெயரில் இரு அணிகளாக பிக்பாஸ் போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு ஸ்வீட்கள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து பல நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் வேளையில், தற்போது அமுதவாணன் மற்றும் விக்ரமன் இடையே வாக்குவாதம் உருவானது தொடர்பான விஷயம், அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

amudhavanan and vikraman in arguement in biggboss 6 tamil

முதலாவதாக பேசும் அமுதவாணன், "நீங்க ஒண்ணு சொன்னா ஜாலியா எடுத்துக்கறீங்க. நான் ஒன்னு சொன்னா அதை சீரியஸா 'Portray' பண்றீங்க. எல்லாத்தையும் பிரச்சனை பண்ணனும்னு சொல்லிட்டு வரீங்களே" என விக்ரமனிடம் கேட்க, "பிரச்சனை பண்றது நீங்க தாங்க" என விக்ரமன் திருப்பி பதில் சொல்கிறார்.

amudhavanan and vikraman in arguement in biggboss 6 tamil

அப்போது முந்தைய தினம் நடந்த விஷயத்தை பற்றி குறிப்பிடும் அமுதவாணன், "நேற்று ஒரு விஷயம் நடந்தது. நீங்க கேட்டு சொல்லணும்ன்னு சொன்னீங்க. கேட்டு சொல்றது என் வேலையா?" என அமுதவாணன் சொன்னதும் பதிலுக்கு விக்ரமன் எதையோ சொல்ல முற்பட, "இது பொய் இது பொய்" என சற்று ஆவேசமாக அமுதவாணன் பேசுகிறார்.

amudhavanan and vikraman in arguement in biggboss 6 tamil

கேட்க வேண்டியதை கேட்க தான் செய்வேன் என விக்ரமனும் திடமாக கூற, "உங்களுக்கு தேவைனா நீங்க கேளுங்க, இப்ப நான் ஏன் கேக்கணும் பர்சனல் விஷயத்த" எனக்கூறி இன்னும் சற்று கொந்தளிக்கவும் செய்கிறார் அமுதவாணன்.

புதிய டாஸ்க் மத்தியில் அமுதவாணன் மற்றும் விக்ரமன் ஆகியோர் சண்டை போடும் விஷயம் தற்போது பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "நீங்க நார்மலா பேசுங்க".. ஒருவழியா ராபர்ட் மாஸ்டரிடம் போட்டு உடைத்த ரச்சிதா.. ரிசல்ட் என்ன.?

தொடர்புடைய இணைப்புகள்

amudhavanan and vikraman in arguement in biggboss 6 tamil

People looking for online information on Amudhavanan, Amudhavanan and vikraman in arguement, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.