‘வெளிய போடி’.. தள்ளிவிட்ட ராபர்ட் .. தாங்கி பிடித்த விக்ரமன்.. களைகட்டிய டிஆர்பி டாஸ்க்.. bigg boss
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார். இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் அரங்கேறிக் கொண்டிருந்த டி.ஆர்.பி டாஸ்கில் போட்டியாளர்கள் அணிகளாகப் பிரிந்து கான்செப்ட் நாடகங்களில் நடித்தனர். அதன்படி ரச்சிதா, விக்ரமன், அமுதவாணன், ராபர்ட், செரினா, ஜனனி, ஆயிஷா, குயின்ஸி உள்ளிட்ட அனைவரும் இணைந்து ஓரணியாக, தாங்கள் தயார் செய்து வைத்திருந்த காமெடி சீரியல் ஸ்கிரிப்டில் நடித்தனர்.
இந்த நிலையில் ரச்சிதாவின் மகன்களாக விக்ரமன் மற்றும் அமுதவாணன் நடிக்க, விக்ரமனுக்கு பெண் பார்க்க, ராபர்ட் வீட்டுக்கு செல்கின்றனர். இதில் மணப்பெண்ணாக செரினா வருகிறார். ஆனால் அவரை பெண் பார்க்க வரவில்லை என்று ரச்சிதா சொல்ல, இறுதியில் செரினாவையே தான் விரும்புவதாக விக்ரம் வெளியேறுகிறார். பின்னர் அமுதவாணன், ராபர்ட்டின் இன்னொரு மகளான ஜனனியை ஓகே பண்ணுவதாக இந்த ஸ்கிரிப்ட் அமையும். அதுவும் அவரது அம்மா ரச்சிதாவுக்கு பிடிக்காததால், தனது மகன்களான விக்ரமனும், அமுதவாணனும் தன் பேச்சை கேட்காததால், தனது இன்னொரு மகனை அழைக்கிறார்.
அப்போது ஆயிஷா ஆண் வேடமிட்டு வருகிறார், ஆனால் அவரோ திருமணம் ஆகி, அவரது கர்ப்பிணி மனைவியாக குயின்ஸியை கையோடு அழைத்து வருகிறார். இப்படி கலகலவென்று இந்த ஸ்கிரிப்ட் போனது. இதில் செரினா, ஜனனி ஆகியோரின் அப்பாவாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் ராபர்ட் மாஸ்டர், செரினாவை வெளியே போ என்று சொல்லும்பொழுது அங்கு ஓடி வரும் விக்ரமன் செரினாவை தாங்கிப் பிடிக்கிறார். இந்த சம்பவம் அங்கிருந்த போட்டியாளர்களிடையே பலத்த கரகோஷத்தை கொடுக்க வைத்தது.
அதன் பிறகு, ‘சரி, நீ ஏன் இங்கே நிற்கிறாய்.?’ என்று கேட்கும் போது, ‘எப்படியும் உன் அப்பா உன்னை வெளியே தள்ளி விடுவார் என்பதால் இங்கேயே நின்று கொண்டிருந்தேன்’ என்கிறார் விக்ரமன். எனினும் விக்ரமன் தாங்கிப் பிடிக்க வில்லை என்றால் செரினா விழுந்தாலும் விழுந்திருப்பார் என்று ரசிகர்கள் இதுகுறித்து கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இவ்வாறான ஒரு ஸ்கிரிப்டில் விக்ரமன் எப்படி பொருந்தி நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக உள்ளதாகவும், எப்போதும் சீரியஸாகவே நாம் பார்த்த விக்ரமன், இப்போது இப்படி நடித்திருப்பது வித்தியாசமாக இருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டு இருக்கின்றனர்.