LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

போடு சக்க..! தமிழிலும் படையெடுக்கும் ஏலியன்கள்.. குஷியில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் பட ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்களில் எல்லா விதமான ஜானகர்களையும் இயக்கிய பின்பு ஏலியன்கள் தொடர்பான திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்கள். வேற்றுக் கிரகவாசிகள் என சொல்லப்படும் இந்த வகையான ஜீவராசிகளின் புதிய பெயர்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு திரைப்படங்கள் ஹாலிவுட் திரைப்படங்களாக வெளியாகின.

next alien genre films in tamil தமிழில் ஏலியன் திரைப்படங்கள்

வார் ஆப் தி வேர்ல்டு, மார்ஸ் அட்டாக், ஏலியன் தொடங்கி பிரிடேட்டர், மென் இன் பிளாக், எட்டர்னல்ஸ் என எவ்வளவோ அன்று முதல் இன்றுவரை ஏலியன்களை மையமாகக் கொண்ட ஹாலிவுட் திரைப்படங்கள் இருந்தாலும் தமிழிலும் தற்போது ஏலியன்கள் தொடர்பான திரைப்படங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கி இருக்கிறது என சொல்லலாம்.

அந்த வகையில் நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.  சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி உள்ள இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். D.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் கேப்டன் வெற்றிச் செல்வன் எனும் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்துள்ளார். மனித நடமாட்டம் இல்லாத பகுதியில் வேற்றுக் கிரக வாசிகளிடம் சிக்கி தவிக்கும் ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் டிரெய்லர் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகிவந்த மற்றுமொரு திரைப்படம் அயலான். இயக்குனர் ரவி குமார் இயக்கிய இந்த திரைப்படம் விரைவில் வெளியாவதற்கு காத்திருக்கிறது. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஏலியன்களை மையமாக வைத்து உருவாகியுள்ள சயின்ஸ் பிக்சன் திரைப்படமான இந்த திரைப்படம் இன்று நேற்று நாளை திரைப்படத்திற்கு பிறகு ரவி குமார் இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படமாகும்.

இதேபோல் ராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் அபு பக்கர் தயாரிப்பில், பிக்பாஸ் ஆரி நடித்திருக்கும் திரைப்படம், ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’. ஆரி, பகவதி பெருமாள், பிஜேஷ் நாகேஷ், KPY சரத் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடித்திருக்கிறார்.

பல மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டிரைலரின் கடைசி நொடிகளில் ஏலியன்கள் வருவதாக காட்டப்பட்டிருக்கும். சயின்ஸ் பிக்சன் காமெடி வகையறாவில் இந்த திரைப்படம் உருவாகி வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

இப்படி சயின்ஸ் பிக்சன் வகையறாவில் ஏலியன்கள் தொடர்பான புதிய திரைப்படங்கள் தற்போது தமிழில் உருவாக தொடங்கி இருப்பது என்பது புதிய போக்காக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

next alien genre films in tamil தமிழில் ஏலியன் திரைப்படங்கள்

People looking for online information on Aari, Arya, Ayalaan, Captain, Captain Trailer, Sivakarthikeyan will find this news story useful.