Viruman Logo Top
Kaateri logo top
www.garudabazaar.com

உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் லால்சிங் சத்தா..‌ ஆமிர்கானுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆமிர் கான் நடித்த லால்சிங் சத்தா படத்தை சிறப்பு திரையிடலில் சிவகார்த்திகேயன் கண்டுகளித்துள்ளார்.

SivaKarthikeyan watched Amir Khan Laal Singh Chaddha Special Screening

Also Read | லோகேஷ் கனகராஜூக்கு கமல் பரிசளித்த கார் இது தானா? வெளியான காரின் முழு புகைப்படங்கள்!

1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தின் ரீமேக்கில் (லால்சிங் சத்தா) டாம் ஹாங்க்ஸ் நடித்த  கம்ப் கதாபாத்திரத்தில் ஆமீர் கான் நடித்துள்ளார்.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளை பாரஸ்ட் கம்ப் படம் வென்று குவித்தது.

இந்த லால்சிங் சத்தா படத்தில் ஆமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடிக்கிறார். 

SivaKarthikeyan watched Amir Khan Laal Singh Chaddha Special Screening

அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் சிறப்பு திரையிடல் சென்னையில் நடந்தது. இந்த திரையிடல் நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு படத்தை கண்டுகளித்தார். மேலும் நடிகர் ஆமிர் கானுடன் இணைந்து புகைப்படம் எடுத்து சிறிது நேரம் கலந்துரையாடல் செய்துள்ளார். சிவகார்த்திகேயன் உடன் அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் உடனிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

SivaKarthikeyan watched Amir Khan Laal Singh Chaddha Special Screening

இந்த படத்தில் நாக சைதன்யா, பாலராஜூ எனும் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா ராணுவ வீரனாக நடித்துள்ளார். நடிகர் ஆமிர் கான் லால் சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரூபா எனும் கதாபாத்திரத்தில் நடிகை கரீனா கபூர் நடிப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

SivaKarthikeyan watched Amir Khan Laal Singh Chaddha Special Screening

இப்படம் வருகிற 11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் நயன்தாரா & விக்னேஷ் சிவன் திருமண வீடியோ.. வெளியான சூப்பர் டீசர்!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan watched Amir Khan Laal Singh Chaddha Special Screening

People looking for online information on Aamir Khan, Amir Khan Laal Singh Chaddha, Laal Singh Chaddha, Sivakarthikeyan will find this news story useful.