Kaateri logo top
www.garudabazaar.com

இயக்குனர் ஷங்கர் உடன் நடிகர் சிவகார்த்திகேயன்.. டிரெண்டாகும் வைரல் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் & இயக்குனர் ஷங்கர் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Director Shankar meet SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Poojai Stills

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங்.. கார்த்தி தோன்றும் தெறியான BTS வீடியோ!

பிரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக மாவீரன் படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைய உள்ளார். இவர் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு மாவீரன் என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

Director Shankar meet SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Poojai Stills

இந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது.

இந்த பூஜையில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டார். மேலும் அங்கு நடந்த சடங்குகளிலும் பங்கு கொண்டு மாலை அணிந்து கொண்டார். மேலும் சிவகார்த்திகேயன், இயக்குனர் மடோன் அஸ்வின் ஆகியோருடன் கலந்துரையாடல் செய்யும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

Director Shankar meet SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Poojai Stills

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். இவர்கள் ஏற்கனவே மண்டேலா படத்தில் பணிபுரிந்தவர்கள்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Director Shankar meet SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Poojai Stills

அதிதி ஷங்கர் தற்போது விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மற்ற முக்கிய வேடத்தில் மிஷ்கின் & சரிதா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Director Shankar meet SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Poojai Stills

Also Read | 'விருமன்' பட இசை வெளியீட்டு விழாவில் 'வாடிவாசல்' பற்றி பேசிய சூர்யா.. வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Director Shankar meet SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Poojai Stills

People looking for online information on Maaveeran, Shankar, Sivakarthikeyan, SivaKarthikeyan Maaveeran Movie will find this news story useful.