Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

இந்தியா டிரெண்ட்டில் முதலிடம்.. மாஸ் காட்டும் ஜெயிலர் FIRST LOOK போஸ்டரை டிசைன் பண்ணது இவரா? செம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் முதல் லுக் போஸ்டர் டிசைனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth Jailer Movie First Look Poster Designer Sivam C Kabilan

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. நடிகை மரியா வெளியிட்ட சரவெடி அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rajinikanth Jailer Movie First Look Poster Designer Sivam C Kabilan

இப்படத்தின் டைட்டில் லுக் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் உள்ள ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் துவங்கி உள்ளது. இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

Rajinikanth Jailer Movie First Look Poster Designer Sivam C Kabilan

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த போஸ்டர் பெற்றுள்ளது. வெளிவந்த தருணத்தில் இருந்து போஸ்டர் டிவிட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Rajinikanth Jailer Movie First Look Poster Designer Sivam C Kabilan

இந்த முதல் லுக் போஸ்டரை பிரபல போஸ்டர் டிசைனர் சிவம் சி கபிலன் வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கனவே கோப்ரா, திருச்சிற்றம்பலம், நட்சத்திரம் நகர்கிறது, காட்பாதர், ஆர் ஆர் ஆர், விருமன், வாத்தி, வணங்கான், லைகர், பிரின்ஸ், வெந்து தணிந்தது காடு, ராதே ஷ்யாம், சாணிக் காயிதம் படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்தவர் ஆவார்.

 

Also Read | கொல மாஸ் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வெளியானது ஜெயிலர் படத்தின் FIRST LOOK போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Jailer Movie First Look Poster Designer Sivam C Kabilan

People looking for online information on Jailer Movie First Look Poster, Rajinikanth, Rajinikanth jailer Movie, Sivam C Kabilan will find this news story useful.