சன் டிவியில் ஒளிபரப்பான 'நந்தினி' சீரியல் அமானுஷ்ய விஷயங்களை சுவாரஸியமாக சொன்ன விதத்தில் பார்வையாளர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் முதன்மை வேடத்தில் நடித்த நித்யா ராமிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இவருக்கு கௌதம் என்பவருடன் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நித்யா தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது மிகவும் வைரலானது.
இந்நிலையில் அவர் தற்போது தனது திருமண வீடியோவை டீஸராக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை நடைபெற்ற அனைத்து சடங்குகளும் வீடியோவாக வெளியாகியுள்ளது. முழுமையான வீடியோவாக வெளியாகும்'' என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Nithya Ram, Nanthini, Marraige, Instagram