யோகி பாபு கல்யாணம்... - டிக்டாக் ரசிகை உருக்கம் - "இப்படி நடக்கும்னு தெரியல..." கலங்கும் வீடியோ!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் யோகிபாபுவின் போட்டோக்களுடன் டிக்டாக் செய்து வந்த அவரது ரசிகை, மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் தவிர்க்க முடியாத காமெடியனாக வளர்ந்துள்ளார். இந்நிலையில் யோகிபாபுவுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர் தனுஷின் கர்ணனின் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் யோகிபாபுவின் தீவிர ரசிகையான சுஜி பிரதீபா என்பவர், டிக்டாக்கில் அவரது போட்டோக்களுடன் வீடியோ எடுத்து ரிலீஸ் செய்து வந்தார். இவர் அண்மையில் யோகிபாபுவின் திருமண போட்டோவுடன், அதை பார்த்து கண்ணீர் விடுவது போல டிக்டாக் செய்ய, அது வைரல் ஆனது. இதையறிந்த யோகிபாபு, இது போல டிக்டாக் செய்வதால், அந்த பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனை வரலாம் என வருந்தியுள்ளார். இதையடுத்து டிக்டாக் செய்த அவரது ரசிகை மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் கூறியதாவது, 'நான் மிகப்பெரிய யோகிபாபுவின் ரசிகை, அவரை ஒரு ஹீரோவாக பார்க்கிறேன். அவருக்கு திருமணம் ஆனதில் எனக்கு தான் அதிக சந்தோஷம். நான் செய்த வீடியோவால் அவருக்கு மனக்கஷ்டம் உண்டாயிருக்கிறது. இப்படி எல்லாம் நடக்கும் என தெரியவில்லை, என்னை மன்னிச்சுடுங்க' என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
@sujipradeepa ♬ original sound - M.S.P