www.garudabazaar.com

SSMB28: புது லுக்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.. மனைவி நம்ரதா பகிர்ந்த மாஸ் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் புதிய லுக் போட்டோவை அவருடைய மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Namrata Shirodkar shared Mahesh Babu New Look Photo SSMB 28

Images are subject to © copyright to their respective owners.

Also Read | விஜய் நடிக்கும் LEO.. படத்தில் Bigg Boss அமுதவாணன் நடிக்கிறாரா?.. முழு விவரம்!

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு.  தற்போது இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் #SSMB28 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்துக்கான அறிவிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். 

Namrata Shirodkar shared Mahesh Babu New Look Photo SSMB 28

Images are subject to © copyright to their respective owners.

டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் கீழ் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) இப்படத்தை தயாரிக்கிறார்.

நவின் நூலி எடிட்டராகவும், கலை இயக்குனராக ஏஎஸ் பிரகாஷூம், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளராக எஸ் தமன் மற்றும் ஒளிப்பதிவாளராக பிஎஸ் வினோத் ஆகியோரும் படத்தில் பணிபுரிகின்றனர்.

Namrata Shirodkar shared Mahesh Babu New Look Photo SSMB 28

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் 81 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது‌.

Namrata Shirodkar shared Mahesh Babu New Look Photo SSMB 28

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மனைவி நம்ரதா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேஷ் பாபுவின் புதிய லுக் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

Namrata Shirodkar shared Mahesh Babu New Look Photo SSMB 28

Images are subject to © copyright to their respective owners.

SSMB28 படத்திற்காக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது நரம்பு புடைத்து நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இவை அமைந்துள்ளன.மகேஷ் பாபு வெளியிட்ட புகைப்படங்களை நம்ரதா பகிர்ந்துள்ளார்.

Also Read | கௌதம் கார்த்திக் உடன் மஞ்சிமா மோகன்.. அந்த கேப்சன் தான் ஹைலைட்டே! 😍 CUTE PHOTO!

தொடர்புடைய இணைப்புகள்

Namrata Shirodkar shared Mahesh Babu New Look Photo SSMB 28

People looking for online information on Mahesh Babu, Mahesh Babu New Look Photo, Namrata Shirodkar, SSMB 28 will find this news story useful.