"லவ் யூ அப்பா".. மறைந்த தனது தந்தை பற்றி நடிகர் மகேஷ்பாபுவின் உருக்கமான பதிவு
முகப்பு > சினிமா செய்திகள்தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் கொண்டாடப்படும் நடிகர் கிருஷ்ணா கடந்தவாரம் மரணமடைந்தார். இந்நிலையில், அவரது மகனும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான மகேஷ்பாபு தனது தந்தை பற்றி உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.
Also Read | "நான் அப்படி சொல்லவே இல்ல.. ஆனா நீங்க..".. ஜனனி - விக்ரமன் இடையே நடந்த வாக்குவாதம்.. Biggboss6
தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா கட்டமனேனி கடந்த 14 ஆம் தேதி காலை ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். ICU -வில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அடுத்தநாள் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
80 வயதான கிருஷ்ணா, இதுவரையில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் மக்கள் இவரை கொண்டாடுகின்றனர். கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ இல் நடித்திருந்தார்.கிருஷ்ணா நடிகர் மட்டும் அல்லாது வெற்றிகரமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். திரையுலகில் இவருடைய பங்களிப்பை பாராட்டும் விதமாக 2009 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1980-களில் காங்கிரஸில் சேர்ந்து எம்.பி.யானார். ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகினார்.
இந்நிலையில், நடிகர் மகேஷ்பாபு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தையின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அவர் எழுதியுள்ள பதிவில்,"உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது... உங்கள் மறைவு இன்னும் கொண்டாடப்படுகிறது... அதுதான் உங்கள் மகத்துவம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை அச்சமின்றி வாழ்ந்தீர்கள்... துணிச்சலும் தைரியமும் உங்கள் இயல்பு. எனது உத்வேகமாக நீங்கள் இருந்தீர்கள். நான் எதிர்பார்த்திருந்தது அனைத்தும் அப்படியே மறைந்துவிட்டன. ஆனால் வினோதமாக, இதுவரை நான் உணராத இந்த வலிமையை என்னுள் உணர்கிறேன்... இப்போது நான் அச்சமின்றி இருக்கிறேன்... உங்களது ஒளி என்றென்றும் என்னுள் பிரகாசிக்கும்... உங்களது மரபை முன்னெடுத்துச் செல்வேன்... உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன். … லவ் யூ அப்பா.. மை சூப்பர் ஸ்டார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களை கண்கலங்க செய்திருக்கிறது.
Also Read | "பழம், தயிரை எல்லாம் அவரே எடுத்து சாப்பிடுறாரு".. நூதன கேஸுடன் வந்த தனலட்சுமி.. இவரு மேல தானா..?
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Super Star Mahesh Babu Father Krishna 3rd Day Ceremony
- 3 Consequence Lost In Telugu Super Star Mahesh Babus Family In 2022
- Actor Mahesh Babu Father Veteran Actor Krishna Dies
- Mahesh Babu Father Krishna Ghattamnaneni Hospitalized
- Sitara Ghattamaneni Crying On The Lap Of Mahesh Babu
- Mahesh Babu Mother Ghattamaneni Indira Devi Passes Away
- Rajamouli Super Star Mahesh Babu SSMB29 Movie GENRE Update
- RK Suresh Doing A Role In Super Star Mahesh Babu SSMB 28
- Mahesh Babu New Look For SSMB 28 Movie Shooting Update
- Mahesh Babu Pooja Hegde SSMB 28 Release Date Announced
- Mahesh Babu Met Billgates Viral Tweet
- Mahesh Babu Keerthy Suresh SVP Ott Streaming Date
தொடர்புடைய இணைப்புகள்
- Mahesh Babu தந்தை Krishna இறுதி அஞ்சலியில் கலக்கத்துடன் இறுதி மரியாதை செய்த Prakash Raj
- "என்னை எப்போமே சிரிக்க வைப்பீங்களே, நீங்க தான் என் ஹீரோ"...தாத்தாவ இழந்த வேதனையில் Mahesh Babu மகள்
- MAHESH BABU ஐ கட்டிப்பிடித்த ஆறுதல் சொன்ன Jagan Mohan Reddy | RIP KRISHNA
- தாத்தா KRISHNA-வைப் பார்த்து கலங்கி நின்ற பேரன், பேத்தி.. ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்த MAHESH BABU
- கவலைப்படாதீங்க Mahesh, நாங்க இருக்கோம்.. கைபிடித்து தைரியம் சொன்ன Tamilisai Soundararajan
- Mahesh BABU-வை கட்டிப்பிடித்து அழுத KOTA SRINIVASAN RAO.. தாங்கி பிடித்த MAHESH BABU
- MAHESH BABU-க்கு ஆறுதலாக கடைசிவரை துணை நின்ற Nandamuri Balakrishna | RIP KRISHNA
- கனத்த இதயத்தோடு Mahesh Babu-வை கட்டி அழுத Pawan Kalyan | RIP Krishna
- பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். | நடிகர் மகேஷ் பாபு தந்தை மரணம்.! அஞ்சலி செலுத்திய தெலுங்கு திரையுலகம். - Slideshow
- ஒரே வருடத்தில் குடும்பத்தில் மூவரை இழந்த மகேஷ் பாபு | நடிகர் மகேஷ் பாபு தந்தை மரணம்.! அஞ்சலி செலுத்திய தெலுங்கு திரையுலகம். - Slideshow
- அஞ்சலி செலுத்த திரண்ட தெலுங்கு திரையுலகம். | நடிகர் மகேஷ் பாபு தந்தை மரணம்.! அஞ்சலி செலுத்திய தெலுங்கு திரையுலகம். - Slideshow
- நடிகர் மகேஷ் பாபு தந்தை மரணம்.! அஞ்சலி செலுத்த திரண்ட தெலுங்கு திரையுலகம். | நடிகர் மகேஷ் பாபு தந்தை மரணம்.! அஞ்சலி செலுத்திய தெலுங்கு திரையுலகம். - Slideshow